மாரப்பம்பாளையம்: அதிகாரிகளை கண்டித்து மக்கள் சாலைமறியல்

61பார்த்தது
மாரப்பம்பாளையம்: அதிகாரிகளை கண்டித்து மக்கள் சாலைமறியல்
மாரப்பம்பாளையம் கிராமத்தில், அரசு புறம்போக்கு நிலத்தை முழுமையாக அளவீடு செய்யாத அதிகாரிகளை கண்டித்து மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். எலச்சிபாளையம் ஒன்றியம், இலுப்புலி கிராமம், மாரப்பம்பாளையம் அருந்ததியர்தெரு அருகாமையில் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் அரசு புறம்போக்கு நிலம் ஒன்று உள்ளது. இந்நிலத்தை அளவீடு செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கடந்த ஒருவருட காலமாக கலெக்டர், ஆர். டி. ஓ. , தாசில்தாரிடம் கோரிக்கைமனு அளித்து வந்தனர். இந்நிலையில், காலதாமதம் செய்து வந்ததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடந்தசில வாரங்களுக்கு முன்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதி ஆர். ஐ. , அனுராதா, துணை தாசில்தார் கனகலட்சுமி உள்ளிட்ட பல அதிகாரிகள் நேற்று நேரில் வந்து அளவீடு செய்தனர். இருந்தும் பணிகளை முழுமையாக செய்யவில்லை.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கேட்டபோது, எங்களுக்கு இன்று நேரமில்லை இன்னொருநாள் வந்து அளவீடு செய்துதருகிறோம் என அதிகாரிகள் அலட்சியமாக பதிலளித்துள்ளனர். இதனால், கோபமடைந்த அப்பகுதி மக்கள் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் தலைமையில், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆர். ஐ. அனுராதா முழுமையாக அளவீடு செய்வதாக உத்திரவாதம் அளித்ததின்பேரில், மக்கள் மறியலை கைவிட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி