மாமுண்டி: மீன் பிடிக்கச் சென்றவா் சேற்றில் சிக்கி பலி

74பார்த்தது
மாமுண்டி: மீன் பிடிக்கச் சென்றவா் சேற்றில் சிக்கி பலி
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில், சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை அடுத்த எஸ். பாப்பாரப்பட்டி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் தனபால் (50). ஓட்டல் நடத்தி வந்த இவரை கடந்த 6 ஆம்தேதி முதல் காணவில்லை. 

பல்வேறு இடங்களில் குடும்பத்தினர் தேடியும் கிடைக்காததால் கடந்த 7 ஆம் தேதி ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் புதன்கிழமை காலை மாமுண்டி ஆற்றுப்பிள்ளையார் கோயில் அருகே திருமணிமுத்தாற்றில் ஆண் சடலம் மிதப்பதாக மல்லசமுத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது, சடலமாக கிடந்தவர் தனபால் என்பதும், ஆற்றில் மீன்பிடிக்க சென்ற போது சேற்றில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது. 

இதுகுறித்த தகவலின் பேரில் ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான வீரர்கள், அங்குச் சென்று அழுகிய நிலையில் இருந்த தனபாலின் சடலத்தை மீட்டனர். மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி