தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனுகொடுக்கும் போராட்டம் நடந்தது. தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், நாடுமுழுவதும் உள்ள பஞ் சாயத்து அலுவலகங்களில் 100நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் அல்லது சட்டப்படி அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பஞ்சாயத்து நிர்வாகிகளிடம் மனுகொடுக்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன்படி நேற்று, மல்லசமுத்திரம் ஒன்றியம், நாகர்பாளையம் பஞ்சாயத்தில், ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர் பழனிவேல், ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.