நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம், மேல்முகம் ஊராட்சி பள்ளிப்பட்டி பகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவையொட்டி அமைக்கப்பட்ட கல்வெட்டினை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் திறந்து வைத்து திமுக இரு வண்ண கொடியினை ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் ஒன்றிய திமுக செயலாளர் பழனிவேல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அருள் செல்வி, ஊராட்சி மன்ற துணை தலைவர் குமரேசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.