மல்லசமுத்திரம்: திமுக சார்பாக ஆலோசனை கூட்டம்

67பார்த்தது
மல்லசமுத்திரம்: திமுக சார்பாக ஆலோசனை கூட்டம்
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றிய திமுக பாக முகவர்கள் (BLA2, BLC) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் ஒன்றிய திமுக செயலாளர் பழனிவேல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி அவர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்வில் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி பார்வையாளர் முனைவர் சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி