கே. எஸ். ஆர் கல்வி நிறுவனத்தில் ஆர்பிட் 2024 நிகழ்ச்சி

53பார்த்தது
கே. எஸ். ஆர் கல்வி நிறுவனத்தில் ஆர்பிட் 2024 நிகழ்ச்சி
திருச்செங்கோடு கே. எஸ். ஆர் கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் கே. எஸ். ஆர் தொழில் வளர்ச்சி மையம், கல்வி நிறுவனங்கள் 'ஆர்பிட் 2024' என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைமை நிர்வாக அதிகாரி அகிலா முத்துராமலிங்கம், நிர்வாகிகள் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். தொழில் மேம்பாட்டு குழுவினர் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் தொழில் நுட்பங்களின் போக்கு, தொழில்களின் தேவைகள், நிறுவனங்களின் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது, புதிய வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு, திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள், இன்டர்ன்ஷிப் வழங்குதல், ஆலைப்பயிற்சிகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் பிரதிநிதிகள் மாணவர்களிடையே பேசினர்.

பின்னர் நடந்த நிகழ்ச்சியில் தலைமை நிர்வாக அதிகாரி, அதிபர்கள், இயக்குனர்கள் மற்றும் பயிற்சி வேலைவாய்ப்பு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பிரதிநி திகள் 'ஆர்பிட்2024' குறித்தும் பேசினர். இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் நன்மை, மாணவர்கள் பணிக்கு வருவதற்கு முன்பு அவர்களை எப்படி தொழில் துறைக்கு தயார்படுத்துவது குறித்து கல்லூரி முதல்வர்கள் ஆலோசனை வழங்கினர். இதனைத் தொடர்ந்து தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அகிலா முத்துராமலிங்கம் பிரதிநிதிகளுக்கு நினைவு பரிசு வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி