நாமக்கல் மாவட்ட நிர்வாகம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து மல்லசமுத்திரத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நேற்று(சனிக்கிழமை) நடத்தின. இதில் பங்கேற்ற 317 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ச. உமா தலைமையில் நடைபெற்ற விழாவில் நகரமைப்பு திட்டக்குழு உறுப்பினர் எஸ். எம். மதுரா செந்தில் முன்னிலை வகித்தார்.
முன்னதாக இம்முகாமில் 5ம் வகுப்பு முதல் 12- ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகள், தையற்பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டனர். இம்முகாமில் 113 தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்றன. சுமார் 2103 இளைஞர்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றனர். அவர்களில் தேர்வான 317 நபர்களுக்கு பணி ஆணைகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச. உமா, வழங்கினார்.