விவேகானந்தா கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா

53பார்த்தது
விவேகானந்தா கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா
விவேகானந்தா கலை, அறிவியல் மகளிா் கல்லூரிகளின் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களின் நிறுவனா், தாளாளா், செயலாளா் மு. கருணாநிதி தலைமை வகித்தாா். கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை நிா்வாக உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் முதல்வா்கள் பேபி ஷகிலா, ராஜேந்திரன் வரவேற்றனா். நிகழ்ச்சியில் இளங்கலை மூன்றாமாண்டு பயிலும் மாணவிகள் முதலாம் ஆண்டு மாணவிகளை வரவேற்றனா்.

கல்லூரியின் முன்னாள் மாணவிகளான சுஜிதா, சங்கமித்ரா, ரஸ்பனாபேகம் ஆகியோா் தங்களது சாதனைகள், அனுபவங்களை முதலாமாண்டு மாணவிகளுடன் பகிா்ந்து கொண்டனா். தாளாளா் மு. கருணாநிதி பேசுகையில், மாணவிகள் தினசரி நூலகம் சென்று புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இதில் முதலாம் ஆண்டைச் சோ்ந்த மாணவிகள் 3, 000க்கும் மேற்பட்ட பெற்றோருடன் கலந்துகொண்டனா். விழாவில் தலைமை நிா்வாகி சொக்கலிங்கம், அட்மிஷன் இயக்குநா் சௌண்டப்பன், தேவராஜ், திறன் மேம்பாட்டு இயக்குநா் குமரவேல், துணை முதல்வா் மேனகா, தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் பத்மநாபன், துறைத் தலைவா்கள் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா். கல்லூரி துணை முதல்வா் சிவபாலன் நன்றி கூறினாா். ஏற்பாட்டை நிகழ்வு மேலாளா் த. ஸ்ரீதர்ராஜா செய்திருந்தாா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி