நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ரூ. 11லட்சத்திற்கு ஏலம் நடந்தது. திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் மொத்தம் 450 மூட்டைகள் வரத்து வந்தது.
இதில், பி. டி. , ரகம் ரூ. 6639 முதல் ரூ. 7569 வரையிலும், சுரபி ரகம் ரூ. 7236 முதல் ரூ. 7979வரையிலும், கொட்டு பருத்தி ரூ. 3705 முதல் ரூ. 4455வரையிலும் என மொத்தம் ரூ. 11 லட்சத்திற்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம், வருகிற 17ல் நடைபெறும்.