நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகனப்பிரியா மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் திருச்செங்கோட்டில் இருந்து தேவனாங்குறிச்சி செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அது சமயம் தகுதி சான்று புதுப்பிக்காத மூன்று வாகனங்கள் மற்றும் தனியார் பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வந்த கார் ஒன்று வாடகை பயன்பாட்டிற்கு பயன்படுத்தியதால் பறிமுதல் செய்யப்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 4 வாகனங்களும் நிறுத்தப்பட்டது. மேலும் வாகன சோதனையில் ரூ.52,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதுபோன்ற சோதனைகள் அடிக்கடி நடத்தப்படும் என்றும் தகுதிச் சான்று, காப்புச் சான்று மற்றும் வாகன ஆவணங்கள் நடப்பில் இல்லாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் மோகனப்பிரியா தெரிவித்துள்ளார்.