கேஎஸ்ஆா் கல்வியில் கல்லூரியில் சுகாதார விழிப்புணா்வுப் பேரணி

81பார்த்தது
கேஎஸ்ஆா் கல்வியில் கல்லூரியில் சுகாதார விழிப்புணா்வுப் பேரணி
கே. எஸ். ஆா். கல்வியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்பு முகாமின் ஒரு பகுதியாக டெங்கு காய்ச்சல் மற்றும் சுகாதார விழிப்புணா்வுப் பேரணி கருமகவுண்டம்பாளையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு கே. எஸ். ஆா். கல்வியியல் கல்லூரி முதல்வா் பி. சுரேஷ் பிரபு தலைமை வகித்து நாட்டு நலப்பணித் திட்டத்தின் மாணவா்கள் கலந்துகொண்ட சுகாதார விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இதில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்று டெங்கு காய்ச்சல் மற்றும் சுகாதார விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தியும், துண்டுப் பிரசுங்களை பொதுமக்களிடம் வழங்கியும் விழிப்புணா்வுவை ஏற்படுத்தினா். மேலும், கருமக்கவுண்டம்பாளையத்தில் உள்ள தொடக்க, உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள குடிநீா்த் தொட்டி, மழை நீா் சேகரிப்பு தொட்டிகளையும் சுத்தம் செய்தனா்.

நிகழ்வில் பங்கு பெற்ற மாணவ ஆசிரியா்களுக்கு கே. எஸ். ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் ஆா். சீனிவாசன், துணை தாளாளா் கே. எஸ். சச்சின் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தொடர்புடைய செய்தி