நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருச்செங்கோடு- பரமத்தி வேலூர் வரை மகளிர் விடியல் பயண கட்டணமில்லா பேரூந்து சேவையை இன்று அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி அவர்கள் தலைமையில் தொடங்கி வைத்து பிறகு, பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார். மேலும் உடன் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.