சமகல்வி எங்கள் உரிமை என்ற முழக்கத்தோடு மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து பாஜகவினர் தமிழக முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்டம் எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றியத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.