நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம், தி. கைலாசம்பாளையம் ஊராட்சி சுப்பராயன் நகர் பகுதியில் ரூ. 8.90 இலட்சம் மதிப்பீட்டில் சாலையை மேம்படுத்துதல் மற்றும் ரூ. 5.65 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு பணிகளை தொடக்கி வைத்தார். இந்நிகழ்வில் ஒன்றிய திமுக செயலாளர் வட்டூர் தங்கவேல், ஒன்றிய பெருந்தலைவர் சுஜாதா தங்கவேல், ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி முருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.