நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள சாணார்பாளையம் நகராட்சி பள்ளியில் இன்று ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமை வகித்து, ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக நகரமன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு, பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். மேலும், மாணவர்களின் தனித்திறன் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.