நாமக்கல் மாவட்ட அளவிலான இலக்கிய மன்ற போட்டி-கவிதை எழுதுதல், திரைப்பட போட்டி-கதை வசனம் என்ற தலைப்பின் கீழ் நடைபெற்றது. மாவட்ட அளவிலான போட்டியில் வெங்கரை பேரூராட்சி நடுநிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.