நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் தொழில் வரி மற்றும் தொழில் உரிமம் பெறாத கடைகளுக்கு, 20 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுத்தும் வரி கட்டாததால், 7 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதில் திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள தொழில் நிறுவனங்கள், தொழில் வரி கட்ட வேண்டும், அரசு உத்தரவுப்படி தொழில் உரிமம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.