சேந்தமங்கலம் அருகே அமைந்துள்ள புதன் சந்தை பகுதியில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் புதன் சந்தை பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே சேந்தமங்கலத்தில் இருந்து சேலம் தேசிய நெடுஞ்சாலைக்கு ஆம்னி வேன் வந்தது. இதை சோதனை செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதில் ஒரு டன் அளவுக்கான ரேஷன் அரிசி இருப்பதை கண்டனர். இதனை அடுத்து வாகனம் மற்றும் ரேஷன் அரிசி அதை கடத்தி வந்த செந்தில்குமார் மற்றும் ராஜேஷ் ஆகியோர் உணவு பாதுகாப்பு தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.