நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், டாக்டர். அம்பேத்கர் அவர்களை நாடாளுமன்றத்தில் இழிவுபடுத்திப் பேசிய அமித்ஷாவை கண்டித்து திருச்செங்கோட்டில் உள்ள அண்ணா சிலை அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர ஒன்றியம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் தோழர் சீனிவாசன் தலைமை தாங்கினார். தோழர்கள் மனோகரன், வேலாயுதம் உள்ளிட்டோர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.