நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பொட்டணம் பகுதியில் புதியதாக அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடத்தை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா இன்று (பிப்ரவரி 05) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் உடன் அரசு அதிகாரிகள், பலர் இருந்தனர்.