சேந்தமங்கலம் வட்டார பகுதியில், மளிகை கடைகளில் அரசால் தடை செய்யப் பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, சேந்தமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன், எஸ்ஐ பிரியா மற்றும் போலீசார் சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி பகுதிகளில் உள்ள மளிகை கடை, டீ கடை, வணிக வளாகம் ஆகியவற்றில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, காளப்பநாயக்கன்பட்டி பிரிவு சாலை செந்தில்குமாருக்கு சொந்தமான மளிகை கடையில், தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, கடையின் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.