சேந்தமங்கலம் அருகே அமைந்துள்ள நடுக்கொம்பு பகுதியில் காட்டாற்று பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக பஞ்சாயத்து கிணறு மின் இணைப்பு வழங்கும் ஒயர் கட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு மோட்டார் ஒயரை திருட்டுப் போனதாக பஞ்சாயத்து தலைவர் விஜயபாஸ்கர் போலீசிடம் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.