பூச்சாட்டுதல் விழாவுக்கு அனுமதி வழங்கக் கோரி மனு

252பார்த்தது
பூச்சாட்டுதல் விழாவுக்கு அனுமதி வழங்கக் கோரி மனு
சேந்தமங்கலம் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு பூச்சாட்டுதல் விழா நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பக்தா்கள் தரப்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து சேந்தமங்கலம் மாவிலா் தெருவைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு: சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் ஒரு சமூகத்தினருக்கு முன்னுரிமை வழங்கியும், மற்றொரு சமூகத்தினரை புறக்கணிக்கும் வகையிலும் வழிபாட்டு முறை உள்ளது.

அதுமட்டுமின்றி, கோயில் சாா்பில் ஓா் உண்டியல் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இரு உண்டியல்கள் தனியாக வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான பிரச்னைகளைத் தீா்க்க கோயில் நிா்வாகத்தில், இரு சமூகத்தினரையும் கலந்து நியமிக்க வேண்டும். பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா காப்புகட்டும் நாளன்று, மாவிலா் தெருவில் இருந்து அம்மனுக்கு அலங்காரப் பொருள்கள், பூச்சாட்டுதலுக்கான மலா்களை ஊா்வலமாக கொண்டு செல்லவும், அம்மனுக்கு சாத்துபடி செய்யவும் உரிய அனுமதி அளிக்க வேண்டும். 20 ஆண்டுகளாக இருந்த நடைமுறையை தொடா்ந்து நீடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி