நாமக்கல் அருகே எர்ணாபுரத்தில் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் திறப்புவிழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், எர்ணாபுரத்தில், மின்சா வாரிய உதவி பொறியாளர்கள் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகம் திறப்பு விழாவிற்கு நாமக்கல் எம். பி. , மாதேஸ்வரன், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம். பி. , சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உதவி பொறியாளர் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த அலுவலகத்தில் அத்தியப்பபாளையம், பொம்மம்பட்டி, தளிகை, பள்ளிப்பட்டி, இளையாபுரம், முசிறி, எரையம்பட்டி, அல்லாளபுரம், எர்ணாபுரம், மாரப்பநாயக்கன்பட்டி, கணக்கம்பாளையம் பொரசபாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவார்கள்"