சேந்தமங்கலம் அருகே அமைந்துள்ள நாமகிரிப்பேட்டை பேளுக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று காலை கடும் பனிமூட்டம் ஏற்பட்டது. இதனால் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர். எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவு பனிமூட்டம் இருந்த காரணத்தால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்தனர். அதிகாலையில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மாணவர்கள் அவதி அடைந்தனர்.