நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே, திருச்செங்கோட்டிலிருந்து - ஈரோடு செல்லும் சாலையில், முனியப்பன் சாமி கோவில், பேருந்து நிறுத்தம் அருக அரசு பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரமாக உள்ள சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்ட வசமாக பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.