நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் இன்று இராசிபுரம் டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்துகொண்டார்கள். மேலும் அனைவருக்கும் சிகிச்சை பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் கண் மருத்துவர்கள் மற்றும் பலரும் உடன் இருந்தனர்.