சேந்தமங்கலம் அருகே உள்ள பெரியகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(40) கூலித்தொழிலாளி. இவர் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, மண்ணெண்ணெய் விளக்கை பற்ற வைத்தபோது, கை தவறி விளக்கு கீழே விழுந்தது. இதில் துணிகள் தீப்பிடித்துக் கொண்டது. தீ வேகமாக எரியத் தொடங்கியது.
இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசன் குடும்பத்தினருடன் வெளியே வந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயற்சி செய்தார். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை மேலும் பரவாமல் அணைத்தனர். இந்தி தீ விபத்தில் வீட்டில் இருந்த துணிகள் எரிந்து சாம்பலனது. இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.