நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள கொல்லிமலையில் நேற்று மாலை இடியுடன் கூடிய கன மழை பெய்தால் கொல்லிமலை முழுவதும் குளிர்ச்சியான நிலை நிலவுகிறது. இதனால் உள்ளூர் விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாளை வாராந்திர விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.