எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் சங்கீதா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகாலட்சுமி, சுகிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் சாலைகள் அமைப்பது தொடர்பாகவும், நீர் வடிகால் வசதி செய்வது தொடர் பாகவும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதில் துணைத் தலைவர் லோகநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள், உதவி பொறியாளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.