சேந்தமங்கலம் அடுத்துள்ள எருமப்பட்டி ஒன்றியம், முத்துக்காப்பட்டி கிராமத்தில், மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து பட்ஜெட் நகல் எரிக்கும் போராட்டம் தோழர் நல்லபிச்சை தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் மு. து. செல்வராஜ், சிவச்சந்திரன், பொன்ராமன், ஜெயராமன், ராஜமாணிக்கம் உட்பட பல கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சட்ட நகலை எரித்தனர்.