துாசூர் ஏரி அருகே உள்ள பாலம் மிக குறுகியதாக உள்ளதால், அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது.
எருமப்பட்டி நாமக்கல் சாலையில் துாசூர் ஏரி உள்ளது. இந்த ஏரியிலிருந்து செல்லும் வழிந்து தண்ணீர், மெயின் ரோட்டை கடந்து செல்லும் வகையில், கடந்த, 50 ஆண்டுக்கு முன் சாலையின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில், மிகவும் குறுகலாக உள்ளதாலும், சாலையின் வளைவில் பாலம் உள்ளதால், இரவு நேரங்களில் அடிக்கடி கனரக வாகனங்கள் மற்றும் பைக்குகள் மோதி விபத்து நடந்து வருகிறது. நெடுஞ்சாலைத் துறையினர், இந்த பாலத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.