சேந்தமங்கலம் அக்ரஹராத்தில் உள்ள பாலசுப்பிரமணியன் ஆலயத்தில் ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு 3ஆம் நிகழ்வாக 108 பால்குடம் ஊர்வலம் மிக விமர்சையாக இன்று நடைபெற்றது. பின்னர், மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோபுர தீபம் உட்பட மகா தீபம் காண்பிக்கப்பட்டது.