நாமக்கல் மாவட்ட பாஜக சார்பாக பாரதப் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் மூன்றாவது முறையாக பதவி ஏற்பு விழா முன்னிட்டு, இன்று வெண்ணந்தூர் ஒன்றியத்தில் பொதுமக்களுக்கு பாஜக சார்பாக இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் ஒன்றிய தலைவர் அருள், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில துணைத்தலைவர் லோகேந்திரன், மாவட்ட செயலாளர் தமிழரசு, பொதுச் செயலாளர் கார்த்தி வெங்கடேஷ் மற்றும் மாவட்ட ஒன்றிய கிளை பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.