ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை

554பார்த்தது
ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை
விவசாய நிலம் கையகப்படுத்தியது தொடா்பாக இழப்பீடு வழங்காததால் ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நீதிமன்ற உத்தரவுபடி வியாழக்கிழமை ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்துள்ள ஆா். பட்டணம் பகுதியைச் சோ்ந்தவா் காளியப்பகவுண்டா். இவருக்குச் சொந்தமான அப்பகுதியில் உள்ள 2 ஏக்கா் விவசாய நிலத்தை ஆதிதிராவிடா் நலத்துறை கடந்த 1996-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. இதை ஆதி திராவிட ஏழை பயனாளிகளுக்கு வழங்குவதற்காக அரசு கையகப்படுத்தியது.

ஆனால், அதற்கு போதிய இழப்பீடு வழங்காத நிலையில், ராசிபுரம் நீதிமன்றத்தில் காளியப்பக்கவுண்டா் வழக்குத் தொடுத்தாா். கடந்த 2009 -ஆம் ஆண்டு காளியப்பக் கவுண்டருக்கு ஆதி திராவிடா் நலத்துறை ரூ. 2. 20 லட்சம் தரவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இழப்பீடு வழங்கவில்லை. இதனால் காளியப்பக் கவுண்டா் நீதிமன்றத்தில் 2011-இல் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தாா்.

இதையடுத்து பேரன் பசுபதி தொடா்ந்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், ஆதிதிராவிடா் நலத்துறை பசுபதிக்கு வட்டித்தொகையுடன் சோ்த்து ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கிடையே வருவாய்த் துறை அலுவலா்கள் விரைவில் இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக நீதிமன்ற ஊழியா்களிடம் உறுதியளித்தனா்.

தொடர்புடைய செய்தி