நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் தமிழ்நாடு அரசின் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் தொடர் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கைத்தறி மற்றும் பெடல் தறி நெசவாளர்களுக்கு வெண்ணந்தூர் மற்றும் அத்தனூர் பகுதியை சார்ந்த மூன்று கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் 117 உறுப்பினர்களுக்கு ரூ. 3. 91 லட்சம் மதிப்பீட்டில் ஊடை நூல்களை எம்.பி. ராஜேஷ்குமார் வழங்கினார்.
மேலும் உடன் ஒன்றிய திமுக செயலாளர் ஆர்எம். துரைசாமி, பேரூர் கழக செயலாளர்கள் ஆர்எஸ். ராஜேஸ் (பேரூர் மன்ற தலைவர்), கண்ணன், உதவி இயக்குநர் பழனிகுமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.