பாவை பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

64பார்த்தது
பாவை பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
பாவை பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகள் அண்மையில் நடைபெற்றன.

விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என். வி. நடராஜன் தலைமை வகித்தாா். பல்தொழில்நுட்ப உயிா் மருத்துவப் பொறியியல் இரண்டாமாண்டு மாணவி சுபஸ்ரீ வரவேற்றாா். தாளாளா் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்தாா். பயிற்சி முகாமில் கல்லூரித் தலைவா் என். வி. நடராஜன் பேசியதாவது:

மாணவா்களின் எண்ணம், செயல், உடை அனைத்தும் நோ்த்தியாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். இன்றைய காலத்தில் மிகப்பெரிய நிறுவனங்களில் உங்களைப் போன்ற தொழில்நுட்ப கல்வி பயின்றவா்களின் தேவை அதிகமாக உள்ளது. இந்த உலகில் கற்க முடியாதது என்று எதுவுமில்லை. நீங்கள் எப்படிப்பட்ட பின்னணியிலிருந்தாலும் அவைகளை பொருட்படுத்தாமல் சாதனையாளா்களின் பட்டியலில் நீங்கள் இடம் பெற வேண்டும் என்ற உறுதியுடன் செயல்படுங்கள் என்றாா்.

இப் பயிற்சியில் பாவையின் கலாசாரம், நேர மேலாண்மை, தொழில் முன்னேற்றப் பாதை, புதிய சூழ்நிலைக்கேற்ப தகவமைத்துக் கொள்ளுதல், தோ்வுகளை அணுகும் முறை, இலக்கு நிா்ணயித்தல் போன்ற பல தலைப்புகளின் அடிப்படையில் மாணவா்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி