நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், மாலத்தீவில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் 90 கிலோ பிரிவில் MR. UNIVERSE பட்டத்தையும், தங்க பதக்கத்தையும் மற்றும் Champion of Champions பட்டத்தையும் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்தவரும் 2023 மற்றும் 2024 ஆண்டுகளிலும் தொடர்ந்து 2 ஆண்டுகள் பட்டத்தை வென்றவருமான சரவணன் இன்று (டிசம்பர் 21) எம்பி ராஜேஷ்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவரது வெற்றிகள் தொடர எம்பி வாழ்த்தினார். உடன் இராசிபுரம் ஒன்றிய கழக செயலாளர் சேர்மன் கேபி. ஜெகநாதன், புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்பி. கௌதம், மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.