இராசிபுரத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் இந்தித் திணிப்பு மற்றும் ஒன்றிய அரசைக் கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நகர கழக செயலாளர் என். ஆர். சங்கர் தலைமையில், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாத், துணை அமைப்பாளர்கள் கார்த்தி, ரமேஷ்குமார், கலைவாணன் ஆகியோர் முன்னிலையில்
நடைப்பெற்றது.
இப்பொதுக் கூட்டத்தில் எம்பி ராஜேஷ்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்வில் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.