ராசிபுரம் அருகே மலையாம்பட்டி பொங்களாயி அம்மன் கோயில் விநோத திருவிழா 200 கெடா 1800 கிலோ கறி விருந்து. ராசிபுரம் அருகே 100 ஆண்டுக்கும் மேலாக ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் சமபந்தி விருந்து வினோத திருவிழா.
இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு பெண்களுக்கு அனுமதியில்லை.! பெண் என்றால் தெய்வம். பெண் என்றால் பக்தி. பல ஊர்களில் பெண்கள், காவல் தெய்வங்களாக இருந்து மக்களைக் காத்துநிற்கும் வரலாறுகளும் இங்கு உண்டு.
இந்தச் சூழலில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஓர் அம்மன், தன் கோயிலுக்குள் பெண்கள் நுழையக்கூடாது; ஆண்கள் மட்டுமே நுழைய வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறாள் என்றால் ஆச்சர்யம் தான். முழுக்க முழுக்க ஆண்கள் வழிபாடு செய்யும் கோயிலாகத்தான் இருக்கிறது. பொங்களாயி அம்மன் கோயில். நாமக்கல் மாவட்டம் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மலையாம்பட்டி கிராமத்தில்தான் இந்த அம்மன் குடிகொண்டிருக்கிறாள். ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு அம்மனுக்குச் சமபந்தி கிடா விருந்து படைக்கிறார்கள்.