ராசிபுரம் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

85பார்த்தது
ராசிபுரம் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து பணியைப் புறக்கணித்து வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இராசிபுரம் நகராட்சியில் 27 வார்டுகளில் 90க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் ஒப்பந்த முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி, தொழிலாளர் மருத்துவ காப்பீடு தொகை பிடித்தம் போன்றவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்றும், ஊதியம் மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் வழங்கப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டி பணியைப் புறக்கணித்து பேருந்து நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இவர்களுக்கு நகராட்சியில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள தனியார் நிறுவனம் ஊதியம் முறையாக வழங்காமல் காலதாமதம் செய்வதாகக் கூறப்படுகிறது. போராட்டத்தால் நகராட்சி முழுவதும் குப்பைகள் தேக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நகராட்சி அலுவலர்கள் தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி