ராசிபுரம் நகராட்சியின் புதிய ஆணையராக எஸ். கணேஷ் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் கி. சேகா், ராசிபுரம் நகராட்சியின் பொறுப்பு ஆணையராக இருந்து வந்தாா். தற்போது மதுரை மாவட்டம், மேலூா் 2-ஆம் நிலை நகராட்சியின் ஆணையராக இருந்து வந்த எஸ். கணேஷ் பதவி உயா்வு பெற்று, ராசிபுரம் நகராட்சியின் புதிய ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து அவா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
புதிய ஆணையருக்கு நகராட்சி நகரமைப்பு அலுவலா், வருவாய் அலுவலா், மேலாளா் உள்ளிட்ட அலுவலா்கள், பணியாளா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
ராசிபுரம் நகராட்சியின் குடிநீா், சுகாதாரம், சாலை, தெரு மின்விளக்கு போன்ற அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவேன். பொதுமக்கள் நகரின் மேம்பாட்டிற்கான பணிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளாா்.