இராசிபுரம்: பள்ளி குழந்தைகளுக்கு இலவச பல் பரிசோதனை முகாம்

62பார்த்தது
இராசிபுரம்: பள்ளி குழந்தைகளுக்கு இலவச பல் பரிசோதனை முகாம்
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த புதூர் மலையாம்பட்டி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ராசிபுரம் கிங்ஸ் அரிமா சங்கம் மற்றும் சேலம் விநாயக மிஷின் பல் மருத்துவமனை இணைந்து இலவச பல் சிகிச்சை முகாம் நடந்தது.

இதில் கிங் அரிமா சங்கத் தலைவர் பழனிவேல், செயலாளர்கள் ரமேஷ், அமுல்ராஜ், முத்துசாமி பொருளாளர் அரிமா கோபி ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுமக்கள், பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக பல் சிகிச்சை நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றுக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி