இராசிபுரம்: ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

64பார்த்தது
இராசிபுரம்: ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ராசிபுரத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற ஒன்றியச் செயலர் வே. லட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட மகளிரணி செயலாளர் கு. பாரதி தொடக்கவுரையாற்றிப் பேசினார். கொள்கை விளக்க அணி செயலாளர் அரங்கநாயகி வரவேற்றார். தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் ப. நடராஜன், கோடீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலப் பொருளாளர் முருகசெல்வராஜன், சொ த்துப் பாதுகாப்புக்குழு செயலாளர் பெ. பழனிசாமி ஆகியோர் ஆர்பாட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார். பொது மாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும். மாநில பணி மூப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு ஒன்றிய, நகராட்சி அளவில் மட்டும் இடமாறுதல் அளிக்க வேண்டும்.

ராசிபுரம், புதுச்சத்திரம், எருமப்பட்டி, நாமக்கல் ஒன்றியங்களுக்கு வழங்கப்பட்ட தலைமயாசிரியர் இடமாறுதல்கள் ரத்து செய்ய வேண்டும். பழைய ஒய்வூதிய திட்டம் தொடர வேண்டும். கடந்த ஆண்டு அரசு ஏற்றுக்கொண்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி