இராசிபுரம் காளியம்மனுக்கு ராகு கால பூஜை

53பார்த்தது
இராசிபுரம் காளியம்மனுக்கு ராகு கால பூஜை
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மனுக்கு நேற்று முன்தினம் காலை 10: 30 மணிக்கு ராகு கால பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை காலையில் ராகு காலத்தில் ஸ்ரீ காளியம்மனுக்கு பால், தயிர், இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

தொடர்புடைய செய்தி