நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை துணை மின் நிலையத்தில், நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விபரங்கள்: நாமகிரிப்பேட்டை, குரங்காத்துப்பள்ளம், கோரையாறு, மூலப்பள்ளிப்பட்டி, தண்ணீர்பந்தல் காடு, அரியாக்கவுண்டம்பட்டி, சீராப்பள்ளி, காக்காவேரி, வெள்ளக்கல்பட்டி, தொ. ஜேடர்பாளையம், புதுப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.