நாமகிரிப்பேட்டை: வீட்டில் மது விற்ற வாலிபர் சிக்கினார்

72பார்த்தது
நாமகிரிப்பேட்டை: வீட்டில் மது விற்ற வாலிபர் சிக்கினார்
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே மங்களபுரம் பகுதியில் சட்டவிரோதமாக அரசு மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்வதாக மங்களபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் போலீசார் சோதனை மேற்கொண்டதில், ஊத்துக்குளிக்காடு கிராமத்தில் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீசார் கிரிசங்கர் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி