ராசிபுரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் அக்பர் மகன் ஹபி(42). இவர் காக்காவேரி அருகே புதியதாக கட்டிடம் கட்டி வருகிறார். இந்த கட்டிடத்திற்கு வயரிங் செய்ய வைத்திருந்த வயரை நேற்று காணவில்லை. இது அவர் அளித்த புகாரின்பேரில் நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். அருகில் இருந்து சி. சி. டி. வி. , கேமராவில் உள்ள பதிவுகளை பார்த்து, சந்தேகத்தின் பேரில் காக்காவேரியில் இருந்து பட்டணம் செல்லும் சாலையில் வசிக்கும் ராமசாமி மகன் கருப்பண்ணன்(23) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
இதில், மாதாக்கோவில் தெரு, காக்காவேரியை சேர்ந்த அமுல்ராஜ் மகன் அருளானந்தம்(19) மற்றும் ராசிபுரம் மாதாக்கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் யேசுராஜ்(21) ஆகியோருடன் சேர்ந்து வயரை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, 3 பேரையும் போலீசார் கைது செய்து, வயரை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.