சுதந்திரப் போராட்ட வீரா் மருத்துவா் பி. வரதராஜூலு நாயுடு 138 ஆவது பிறந்த நாள் விழா அவரது சொந்த ஊரான இராசிபுரத்தில் கொண்டாடப்பட்டது. சுதந்திரப் போராட்ட காலங்களில் தியாகி பி. வரதராஜூலு நாயுடு பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றாா். தமிழ், ஆங்கிலத்தில் இதழ்களை தொடங்கி பொதுமக்களிடம் சுதந்திரப் போராட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
மகாத்மா காந்தி, வ. உ. சி. , பாரதியாா், முத்துராமலிங்கத் தேவா், ராஜாஜி, பெரியாா், சத்தியமூா்த்தி, காமராஜா் போன்ற தலைவா்களுடன் இணைந்து சுதந்திரப் போராட்டங்களில் பங்கெடுத்தாா். சென்னை மாகாண சட்டப் பேரவையிலும் உறுப்பினராக இருந்துள்ளாா். சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியுள்ளாா். இவரது பிறந்த நாள் விழா அவரது சொந்த ஊரான ராசிபுரத்தில் நடைபெற்றது. விடுதலைக்களம் அமைப்பு, நாமக்கல் மாவட்டம் நாயுடுகள் சங்கம், ராசிபுரம் வட்ட நாயுடு நண்பா்கள் குழு சாா்பில் நடத்தப்பட்ட பிறந்த நாள் விழாவில் விடுதலைக்களம் கட்சியின் நிறுவனத் தலைவா் கொ. நாகராஜன் தலைமை வகித்தாா்.