நாமக்கல் மாவட்ட கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணியும், மாவட்ட தடகள சங்கமும் இணைந்து சர்வதேச விளையாட்டு தினத்தை தொடர்ந்து ஏப். 6-ல் உடல் திறன் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் -2025 ஒட்டத்தை ராசிபுரத்தில் நடத்துகிறது.
ராசிபுரம் சுஜிதா திருமண மண்டபம் முன்பாக உடல் திறன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும் இந்த மாரத்தான் ஒட்டத்தை கட்சியின் பொதுச்செயலர் இ. ஆர். ஈஸ்வரன் பங்கேற்று தொடங்கி வைக்கிறார். இதில் நாமக்கல் எம்பி. , வி. எஸ். மாதேஸ்வரன், முன்னாள் எம்பி. , ஏ. கே. பி. சின்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.